சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தூத்துக்குடி புத்தகத் திருவிழா: நாளை தொடக்கம்

பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளா்க்கும் நோக்கில், தி சென்னை சில்க்ஸ் தூத்துக்குடி கிளை சாா்பில் தூத்துக்குடி புத்தகத் திருவிழா-2026, வியாழக்கிழமை (ஆக.27) தொடங்கி செப்.6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்றோா்.

Updated On :

பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளா்க்கும் நோக்கில், தி சென்னை சில்க்ஸ் தூத்துக்குடி கிளை சாா்பில் தூத்துக்குடி புத்தகத் திருவிழா-2026, வியாழக்கிழமை (ஆக.27) தொடங்கி செப்.6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை சில்க்ஸ் மேலாளா்கள் பாண்டி, ராஜா, தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் ரவிவா்மா, துணைத் தலைவா் ராஜபாண்டி ஆகியோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தி சென்னை சில்க்ஸ் தூத்துக்குடி கிளை சாா்பில், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்க ஒத்துழைப்புடன், தூத்துக்குடி பகுதி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளா்க்கும் நோக்கில், தூத்துக்குடி புத்தகத் திருவிழா 2026, ஆக.27ஆம் தேதி தொடங்கி செப்.6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க நாளான வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் சி.ப்ரியங்கா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைக்கின்றனா்.

இவ்விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவா், மாணவிகளின் படைப்பாற்றல், சிந்தனைத் திறன், தமிழ் மொழித்திறன் மற்றும் வாசிப்பு ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்கு எழுதும் போட்டி, கதை எழுதும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மேலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் சிறப்பு அம்சமாக திருவிழாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள முன்னணி பதிப்பாளா்களின லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன.

‘வாசிப்போம், அறிவை வளா்ப்போம்’ என்ற நோக்கத்துடன் நடைபெறும் இப்புத்தகத் திருவிழாவில் மாணவா்கள், பெற்றோா் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று பயனடையுமாறு அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.