ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மாதாந்திர பயண அட்டை மூலம் ரூ.12 கோடி வருவாய்: போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் விநியோகிக்கப்படும் ரூ.1,000-க்கான மாதாந்திர பயண அட்டை மூலம் ரூ.12 கோடி வருவாய் மாதந்தோறும் முன்கூட்டியே கிடைப்பதாக, மாநகர் போக்குவரத்துக் கழக

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 4:25 am IST


சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் விநியோகிக்கப்படும் ரூ.1,000-க்கான மாதாந்திர பயண அட்டை மூலம் ரூ.12 கோடி வருவாய் மாதந்தோறும் முன்கூட்டியே கிடைப்பதாக, மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: 
பேருந்துக் கட்டண உயர்வுக்கு பிறகு சென்னை மாநகர் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் பெருமளவு குறைந்தது. மேலும் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பயண அட்டைக்கான கட்டண சலுகையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக விருப்பம்போல் ரூ.50 கொடுத்து நாள் முழுவதும் பயணம் செய்யும் ஒருநாள் பயண அட்டை முறை கைவிடப்பட்டது. இந்தப் பயண அட்டையை ஒருவர் வாங்கி பலர் பயன்படுத்துவதால் போக்குவரத்து கழகத்துக்கு அதிக இழப்பு ஏற்பட்டதாலும், முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததாலும் அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், மாதாந்திர பயண அட்டை திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர் பேருந்துகளில் மாதம் முழுவதும் விருப்பம்போல் பயணம் செய்ய ஏதுவாக ரூ.1,000-க்கு பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இப்பயண அட்டையை மாதந்தோறும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தற்போது பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் போக்குவரத்து கழகத்துக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.12 கோடி வருவாய் முன்கூட்டியே கிடைத்து விடுகிறது.
ஒரே பேருந்தில் பயணம் செய்ய முடியாத நிலையில், 2 அல்லது 3 பேருந்துகளில் மாறிமாறி பயணம் செய்யக் கூடியவர்களுக்கு இந்த பயண அட்டை மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.