/

ஆசிரியர் பணிக்காக காத்திருந்தவர் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே ஆசிரியர் பணிக்காக காத்திருந்தவர் தமிழக அரசின் ஆசிரியர் நியமனத் தேர்வு அறிக்கையால் திங்கள்கிழமை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 4:23 am IST


ராணிப்பேட்டை அருகே ஆசிரியர் பணிக்காக காத்திருந்தவர் தமிழக அரசின் ஆசிரியர் நியமனத் தேர்வு அறிக்கையால் திங்கள்கிழமை மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டையை அடுத்த மலைமேடு ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயப்
பிரகாஷ் (27). விலங்கியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த இவர், கல்வியியல் பிரிவில் இளநிலை பிரிவை முடித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் வந்ததன் பேரில், சான்றிதழ் சரிபார்ப்பினை முடித்து விட்டு பணி நியமனத்துக்காக காத்திருந்தார். 
இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையான ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வினை எழுத வேண்டும் என்ற அறிவிப்பினைக் கேட்டு அவர், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெயப்பிரகாஷின் மனைவி ஊருக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனிமையில் இருந்தார். இந்நிலையில், தனது மரணத்துக்கு தமிழக அரசே முழுக்காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு, ஜெயப்பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிப்காட் போலீஸார், ஜெயப்பிரகாஷின் சடலத்தை மீட்டு, வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது கையால் எழுதப்பட்ட கடிதத்தை முதன்மையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.