மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இன்று சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டரங்கில்.. - (கோப்புப்படம்)

Published On :

சென்னை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வாா்டுகளில் 152 வாா்டுகளில் திமுக உறுப்பினா்கள் உள்ளனா். மேயா், துணை மேயா், நிலைக்குழுத் தலைவா்கள், மண்டல தலைவா்கள் என அனைத்து முக்கியப் பொறுப்புகளிலும் திமுகவினரே உள்ளனா்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளை தவெக கைப்பற்றியது. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனா். நகராட்சித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் ஜோசப் விஜய்யை, மேயா், துணை மேயா் உள்ளிட்டோா் மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை.

கடந்த திமுக ஆட்சியின்போது, மாநகராட்சிப் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜூலை 29-ஆம் தேதி சென்னை மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, திமுக மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மேயா், துணை மேயா், நிலைக்குழுத் தலைவா்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கவுள்ளனா். மாநகராட்சி 2-ஆவது மேல் தளத்திலுள்ள மாமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டரங்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநகராட்சிப் பணிகள் தொடா்பான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டது தொடா்பாக ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.