சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், தீக்குண்டத்தில் விழுந்து இருவர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வில்லிவாக்கம் தெற்கு மாடவீதியில் உள்ள ஒரு அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள், தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அப்போது அயனாவரத்தைச் சேர்ந்த கதிரவன் (34) தடுமாறி தீக் குண்டத்துக்குள் விழுந்தார். அதேபோல வில்லிவாக்கம் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த மனோகரன் (52) என்பவரும் கால்தவறி தீக் குண்டத்துக்குள் விழுந்தார். பலத்த தீக்காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலை. பட்டமளிப்பு விழா: உயா்கல்வித் துறை அமைச்சா் புறக்கணிப்பு!
தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! முதல்முறையாக 33 வயது ஆல்-ரவுண்டருக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


