வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

எழும்பூர் ரயில் நிலையத்தில் குறைவான கவுன்ட்டர்கள் : நீண்டநேரம் காத்திருக்கும் பயணிகள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதில்லாத டிக்கெட் கவுன்ட்டர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பயணிகள்

News image
Updated On :26 டிசம்பர் 2018, 4:13 am IST


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதில்லாத டிக்கெட் கவுன்ட்டர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பயணிகள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்கும் நிலை உள்ளது .
தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில் நிலையம் விளங்குகிறது. இந்த ரயில் நிலையத்தில் (வெவ்வேறு நகரங்களில் இருந்து வருகின்ற ரயில்கள், புறப்படும் ரயில்கள்) என்று மொத்தம் 56 விரைவு ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே செல்லும் மின்சார ரயில்கள் எழும்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. இவ்வாறு, விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் ஆகியவற்றில் பயணம் மேற்கொள்ள நாள்தோறும் ஒரு லட்சம் பயணிகள் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இதுதவிர, பண்டிகை நாள்கள், விடுமுறை நாள்களில் ஒன்றரை லட்சம் மக்கள் வ ந்துசெல்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த ரயில் நிலையத்தில் இருந்து மத்திய, தென் மாவட்டங்களுக்கு பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இவர்கள் டிக்கெட் எடுப்பதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் 6 முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்ட்டர்கள் உள்ளன. இந்த கவுன்ட்டர்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்டர் உள்பட 4 டிக்கெட் கவுன்ட்டர்கள் தான் முறையாக செயல்படுகின்றன. இதில் ஒரு கவுன்ட்டரை நடைமேடை டிக்கெட் வழங்கும் கவுன்ட்டராக மாற்றி டிக்கெட் வழங்கப்படுகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை 4 முதல் 5 கவுன்ட்டர்கள் வரை செயல்படுகின்றன. மீதம் நேரம் எல்லாம் 2 அல்லது 3 கவுன்ட்டர்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்த கவுன்ட்டர்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் குவிந்தவண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, மாலை நேரங்களில் ஒவ்வொரு கவுன்ட்டரிலும் பல நூறு பயணிகள் வரிசையில் நெடுநேரம் காத்திருந்து டிக்கெட் எடுக்க வருகின்றனர். இதனால், சில நேரங்களில் தங்கள் ஊருக்குச் செல்லும் ரயில்களைப் பிடிக்கமுடியாமல் தவறவிடும் நிலை ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். 
கூடுதல் கவுன்ட்டர்கள் தேவை: இது குறித்து பயணிகள் சிலர் கூறியது: எழும்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பதற்காக நெடுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், எங்கள் ஊருக்குச் செல்லும் ரயில்களை தவறவிடும் நிலையும், கடைசி நேரத்தில் ரயிலைப் பிடித்து, நெரிசலில் சிக்கி பயணிக்கும் நிலையும் உள்ளது. எனவே, கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: எழும்பூர் ரயில் நிலையத்தில் 5 கவுன்ட்டர்களும், பூந்தமல்லி சாலை பகுதியில் 2 டிக்கெட் கவுன்ட்டர்களும் செயல்படுகின்றன. இந்த கவுன்ட்டர்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. டிக்கெட் கவுன்ட்டர்களில் பணியாற்ற 40 ஊழியர்கள் தேவை. ஆனால், 32 ஊழியர்கள்தான் உள்ளனர். இவர்களில் சிலர் உடல்நலக் குறைவு, சொந்த காரணங்கள் காரணமாக விடுமுறையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், குறைவான ஊழியர்களை வைத்து அதிக நேரம் வேலை பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அதனால், நடைமேடை டிக்கெட் கொடுப்பதற்கு கூட தனியாக கவுன்ட்டர் செயல்பட முடியாமல், ஒரே கவுன்ட்டரில் நடைமேடை டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் ஆகியவற்றை இணைத்து டிக்கெட் கொடுக்கும் நிலை உள்ளது. போதுமான ஊழியர்களை நிர்வாகம் நியமித்தால்தான் இதற்கு தீர்வு காணமுடியும் என்றனர்.
முன்பதில்லாத கவுன்ட்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, எல்லா கவுன்ட்டர்களும் செயல்பட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.