சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை காலை வந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் அதன் முன்பகுதி சேதமடைந்தது. இதையடுத்து அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த 172 பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர்.
சிங்கப்பூரில் இருந்து விமானப் பணியாளர்கள் உள்பட 172 பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சென்னைக்கு திங்கள்கிழமை காலை வந்தது. இந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க சுமார் 400 அடி உயரத்தில் பறந்தபோது அந்த விமானத்தின் மீது பறவை மோதியது. இதில், விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
இதையடுத்து, விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதன் காரணமாக மீண்டும் அந்த விமானம் சிங்கப்பூர் செல்வதற்காக திட்டமிட்டிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் செல்வதற்கு தயாராக இருந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அடிக்கடி விமானங்கள் பறவைகளால் சேதமடைவதைத் தடுக்க விமான நிலையப் பகுதிகளில் பறவைகள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







