ஜூன் 11-இல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர் குறைதீர் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடர்பான வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில்


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடர்பான வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தக் குறைதீர் கூட்டத்தில், காலை 10.30 முதல் 11.30 மணி வரை வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுவனங்களின் உரிமையாளர்கள், மாலை 4 முதல் மாலை 5 மணி வரை பி.எஃப் பங்களிப்பிலிருந்து விலக்குப் பெற்ற அம்பத்தூர் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
குறைதீர் கூட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், 3-ஆவது தளம், ஆர் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37' என்ற முகவரியில் நடைபெறுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு 044- 26350080, 26350120 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என உதவி பி.எஃப். மண்டல ஆணையர் எம்.குமாரவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...