துப்புரவு பணியாளரை தாக்கிய விவகாரம் குறித்து காவலர் உள்பட 3 பேரிடம் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணைநடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பரங்கிமலைகண்டோன்மென்ட்டில் பணிபுரியும் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் துப்புரவு தொழிலாளி, பரங்கிமலை பட் சாலை அருகே உள்ள பஜாரில் செவ்வாய்க்கிழமை துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் குடியிருக்கும் சில இளைஞர்கள், மாடியில் இருக்கும் குப்பையை எடுத்துச் செல்லும்படி கூறினராம். இதைக்கேட்ட அந்த பெண், மாடியில் இருந்த குப்பையை எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஒரு இளைஞர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண், அருகே மற்றொரு பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தனது கணவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அந்த பெண்ணின் கணவர், அந்த இளைஞரை தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞரும், அவரது நண்பர்களான, சென்னை காவல்துறையைச் சேர்ந்த காவலர் உள்பட 2 பேரும் அந்த பெண்ணின் கணவரிடம் தகராறு செய்து அவரை தாக்கினராம்.
இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.