ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

இரு மகன்களை கொன்று தந்தை தற்கொலை

சென்னை அருகே விஷம் கொடுத்து இரு மகன்களை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :27 ஜூன் 2018, 4:20 am IST

சென்னை அருகே விஷம் கொடுத்து இரு மகன்களை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியைச் சேர்ந்தவர் ஹபீப் ரகுமான் (40). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு தன்னுடன் வேலை செய்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனிஷா பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு முகம்மது நைப் (6), ரயான் (3) ஆகிய இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், சவூதி அரேபியாவில் இருந்து தம்பதிகள் இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை திரும்பினர்.
ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னையின் காரணமாக அனிஷா, கணவரையும் குழந்தைகளையும் விட்டு பிரிந்து இலங்கைக்குச் சென்றுவிட்டார். இதனால் குழந்தைகளுடன் ரகுமான் சென்னை மதுரவாயலில் வசித்து வந்தார். 
மேலும் அவர் கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அண்மையில் சென்னை வந்த அனிஷா, தனது கணவரையும், குழந்தைகளையும் பார்க்கவில்லையாம். இதனால் ரகுமான் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார்.
இது தொடர்பாக அவர், அனிஷாவை செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அதன் பின்னர், ரகுமான் விரக்தி நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ரகுமான் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. அப்பகுதி பொதுமக்கள், மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டினுள் ரகுமான், அவரது மகன்கள் முகம்மது நைப், ரயான் ஆகியோர் சடலங்கள் அழுகிய நிலையில் கிடப்பதைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். 3 சடலங்களும் உடனடியாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 
முதல் கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னையின் காரணமாக ரகுமான், இரு நாள்களுக்கு முன்பு தனது குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.