ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

சென்னை புறநகரில் புதிய கல்லூரிகள்

சென்னை புறநகர்ப் பகுதிகளில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

சென்னை புறநகர்ப் பகுதிகளில் புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பல்லாவரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி பேசுகையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், சென்னை புறநகர்ப் பகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் குறைவாக உள்ளன. தனியார் கல்லூரிகள்தான் அதிக அளவில் உள்ளன. மறைமலை அடிகள் நினைவாக மறைமலைநகரில் கலைக் கல்லூரி தொடங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் அன்பழகன் அளித்த பதில்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 45 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக பெரும்பாக்கத்தில் புதிய கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனினும், மாணவர்கள் நலன் கருதி எதிர்காலத்தில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.