காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

குதிரையின் கழுத்து அறுப்பு: 3 பேர் கைது

சென்னை மெரீனாவில் இளைஞரிடம் ஏற்பட்ட முன் விரோதத்தில் குதிரையின் கழுத்தை அறுத்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :29 ஜூன் 2018, 4:17 am IST

சென்னை மெரீனாவில் இளைஞரிடம் ஏற்பட்ட முன் விரோதத்தில் குதிரையின் கழுத்தை அறுத்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 6-ஆவது தெருவைச் சேர்ந்தவர் செ.ராஜேஷ் (35). குதிரை வைத்திருக்கும் இவர், இந்தக் குதிரையை மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் சவாரிக்குப் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் ராஜேஷின் குதிரை, வீட்டின் அருகே உள்ள லாயத்தில் கடந்த 24-ஆம் தேதி கட்டப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிலர், குதிரையின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினர்.
குதிரையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ராஜேஷ் குடும்பத்தினர், குதிரையை உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளித்தனர். கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த குதிரைக்கு சுமார் 50 தையல்கள் போடப்பட்டன. இதுதொடர்பாக ராஜேஷ், மெரீனா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதனடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ர.விக்னேஷ் (18), பா.விஷால் (19), ர.கார்த்திக் (22), கோகுல் ஆகியோர் இச்செயலை செய்திருப்பதும், ராஜேஷூக்கும், கோகுலுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் விக்னேஷ், விஷால், கார்த்திக் ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோகுல் தேடப்பட்டு வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.