ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து, தில்லி அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகில் கார்த்தி சிதம்பரம் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக ப.சிதம்பரம் தினமும் கேள்வி எழுப்புவதால், பழிவாங்கும் நோக்குடன் அவரது மகன் கைது செய்யப்பட்டிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் குற்றம் சாட்டினர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.