/

டாஸ்மாக் மதுபானக் கடை சுவற்றில் துளையிட்டு ரூ.10 லட்சம் திருட்டு

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் மதுபானக் கடை சுவற்றில் துளையிட்டு ரூ.9.8 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.

Updated On :14 மே 2018, 9:17 pm

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் டாஸ்மாக் மதுபானக் கடை சுவற்றில் துளையிட்டு ரூ.9.8 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது.
புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு அருணாச்சலீஸ்வரர் கோயில் தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை பூட்டிச் சென்றனர்.
திங்கள்கிழமை காலையை கடையைத் திறந்தபோது கடையின் பின்பக்கச் சுவற்றில் துளைபோட்டு ரூ.9.8 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரிய வந்தது.
வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.