இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

எழிலகத்தில் தீ விபத்து

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :6 நவம்பர் 2018, 2:49 am IST


சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை கட்டடத்தில் திங்கள்கிழமை காலை திடீரென புகை எழும்பியது. சிறிது நேரத்தில் அங்கிருந்த பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. மேலும் தீ வேகமாக பரவத் தொடங்கியது.இதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. ஏ.சி. இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்துக்கு காரணம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் அங்கிருந்த ஏ.சி., இன்வெர்ட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.