தனியார் பேருந்துகளில் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பி.பொன்னையா எச்சரித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆட்சியர் பி.பொன்னையா ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். வெளியூர் செல்லும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முன்பதிவு செய்து பேருந்து வருகைக்குக் காத்திருக்கும் பயணிகள் அமர வசதியாக பந்தல்களில் மின்விசிறிகளுடன் இருக்கை வசதி, குடிநீர் தொட்டி, நகரும் கழிவறை, அவசர மருத்துவ சிகிச்சை மையம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகன வசதி ஆகியவற்றை பார்வையிட்டார்.
பேருந்து வருகைக்காகக் காத்திருந்த பயணிகளிடம் ஏதேனும் குறைகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார். பேருந்து நிலையத்தில் 300 போலீஸாருடன் 24 மணி நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை நடவடிக்கை குறித்து வண்டலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வளவனிடம் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது:
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள வசதியாக தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து
நிலையம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்திலும் பயணிகளை ஏற்றிச் செல்ல வகை செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பி சொந்த ஊருக்கு பயணிகள் செல்ல முடியாத நிலை பல வருடங்களாக இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு பயணிகளுக்கு சிரமம் ஏற்படாமல் போக்குவரத்து நெருக்கடி இல்லாத நிலையை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து நடவடிக்கையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாகக் கடந்த ஆம்னி பேருந்துகளை வெளி வட்ட சாலை வழியாகச் செல்ல அனுமதித்தன் மூலம் நெரிசல் குறைந்துள்ளது.
இதனால் எங்கும் எவ்வித போக்குவரத்து நெரிசலும் ஏற்படாமல் அனைத்து பேருந்துகளும் குறித்த நேரத்தில் புறப்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலவிரையம், எரிபொருள் விரையமும் தவிர்க்கப்பட்டுள்ளது.
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் அளித்தால் உடனடியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் பி.பொன்னையா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமாதானத் தூதராக உருவெடுத்துள்ளது பாகிஸ்தான்: ஷெபாஸ் ஷெரீஃப் பெருமிதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!





