பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, அதனை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை

News image
Updated On :9 அக்டோபர் 2018, 4:22 am IST


சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, அதனை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.
சென்னையை அடுத்த நன்மங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வன உயிரின வார நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:
நாட்டில் அதிக மரங்களை வளர்த்து காடுகளின் அடர்த்தியை அதிகரிப்பது, ஈரமான நிலங்களை பாதுகாப்பது, கடலோர பகுதிகள், வலுவிழந்த சூழலியல் மண்டலங்களை பாதுகாப்பது ஆகிய நடவடிக்கைகளில் தமிழகம் முதலிடம் பெற்று முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. காடுகள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாத்து பராமரிக்கும் வகையில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று மரம் நடுதல், புலிகள், யானைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, வனப்பகுதிகளில் தீத்தடுப்பு, விலங்குகள் வேட்டைத் தடுப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வன உயிரினங்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவி அளிக்க ஈரோடு, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வனக் கால்நடை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 5 -ஆவது புலிகள் சரணாலயம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, அடர்ந்த காடுகளுக்குள் கண்காணிப்பு கேமரா, கூகுள் வரைபடம், ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்ப உதவியுடன் புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம், காலடித் தடங்களை வைத்து அவற்றை கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அனைத்து வனத் துறை அலுவலகங்களிலும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்அமைச்சர்.
வன உயிரின வார விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், வனத்தோட்டத் தலைவர் உபாத்யாயா, சுற்றுச்சூழல், வனத்துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஹெச்.மல்லேசப்பா, 
தென்சென்னை மக்களவை உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் என்.சி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.