சென்னை மதுரவாயல் அருகே மென்பொறியாளர் வீட்டில் தங்கநகைகள், பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரவாயல் அருகே உள்ள வானகரம் முதலாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சு.மதுசூதனன் (32). மென்பொருள் பொறியாளரான இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மதுசூதனன், கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் ராமாபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்குச் சென்றார்.
அங்கிருந்து மதுசூதனன், ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.11 ஆயிரம் ரொக்கம் திருடு போனதை அறிந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் சென்ட்ரல் அவென்யூவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் எஸ்.கே.ரவி (62). இவர் கடந்த 6-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை ரவி வீடு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், 4 விலையுயர்ந்த செல்லிடப்பேசிகள் ஆகியன திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோடம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எரிபொருள் விலை உயர்வு: கண்டன அறிக்கை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?

தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!
5 நாள் சுற்றுப் பயணம்: நெதர்லாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
