சென்னை தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றிய ஏழு பேருக்கு சென்னைக்கு பெருமை' விருது வழங்கப்பட்டது.
சென்னை தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அமைப்புகளில் சார்பில் போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரோட்டரி சங்கம், பெசன்ட் நகர் மூத்த குடிமக்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சென்னைக்கு பெருமை' என்ற நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், மனநல மருத்துவ நிபுணர் லட்சுமி விஜயகுமார், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஆபிரஹாம் குரியன், டிரான்ஸ் இந்தியா ரிசார்ட்ஸ் லிமிடெட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி வசுமதி மாரிமுத்து, வழக்குரைஞர் பி.ஹரிஹரன் ஆகியோர் உள்ளிட்ட 7 பேரின் சேவையைப் பாராட்டி சென்னைக்கு பெருமை' என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நடராஜன் நாகோஜி, சுந்தரேசன், மூத்த குடிமக்கள் சங்கத்தின் தலைவர் வி.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்: செல்வப்பெருந்தகை

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார்: கடம்பூர் ராஜு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

