ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

போதைப்பொருள் கடத்தல்: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

தில்லியிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் ஹெராயின் கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு

Published On :


தில்லியிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் ஹெராயின் கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் ஹெராயின் கடத்தப்படுவதாக கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப்பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். 
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் ரயிலில் இருந்து இறங்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரசூல் மைதீன் என்பதும் அவரிடம் ஹெராயின் என்ற போதைப்பொருள் இருந்ததால் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அய்யப்பன் முன் விசாரணைக்கு வந்தது. 
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ள 
ரசூல் மைதீனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.