உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு அமெரிக்கா ரூ. 300 கோடி நிதி வழங்கியுள்ளதைப் பற்றி...

Donald Trump

அமெரிக்க அதிபர் டிரம்ப். - படம்: ஏபி.

Published On :

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. இந்தியர்கள் உள்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 1,451 பேர் உயிரிழந்தனர். மேலும், 6,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் மீட்புப் பணிகளுக்கு தங்களுடைய வீரர்களை அனுப்புதல், நிவாரணப் பொருள்கள் வழங்கின.

ஏற்கனவே, இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 34 கோடிக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருள்களை அமெரிக்கா வழங்கியிருந்தது.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு உதவும் வகையில், சுமார் 31 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 300 கோடி) வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாலங்கள் கட்டுவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பேரிடர் நிதியாகவும் நிதியுதவியை செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் அமர்வின் ஒரு பகுதியாக, நியூயார்க்கில் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானலை சந்தித்த பின், அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் அலிசன் ஹூக்கர், நிதியுதவி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன 70 அமெரிக்கர்களின் குடும்பத்தினர் உள்பட மாயமானோருக்கு வருத்தம் தெரிவித்த ஹூக்கர், நிதியுதவி தொடர்பாக பேசினார்.

எதிர்கால பேரிடர் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 13 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான டிரோன்களை வழங்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Summary

The US announced USD 31 million in funding for Nepal to build bridges in flood-affected areas, address civic needs of affected communities and support the deployment of drones to assist in future disaster recovery efforts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.