உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

நேபாள பெருவெள்ளம்: ரூ. 34 கோடி நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும்! - அமெரிக்கா

நேபாளத்துக்கு ரூ. 34 கோடி நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது குறித்து...

A flood-affected area in Nepal.

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி. - படம் - ஏஎன்ஐ

Published On :20 வினாடிகள் முன்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 34 கோடி நிவாரணப் பொருள்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

இந்தியர்கள் உள்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 700 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு உலகின் பல நாடுகள் மீட்புப் பணிகளுக்கு தங்களுடைய வீரர்களை அனுப்புதல், நிவாரணப் பொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில், ரூ. 34 கோடிக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருள்களை அமெரிக்கா வழங்க உள்ளதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு அவசரகால உணவுப் பொருள் உள்ளிட்டவையும் அமெரிக்கா வழங்கவுள்ள நிவாரணப் பொருள்களில் அடங்கும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

Summary

The United States has announced that relief supplies worth ₹34 crore will be provided to flood-hit Nepal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.