
சர்வதேச உதவியை மறுக்கவில்லை.. ஆனால்! - மீட்புப் பணிகள் குறித்து நேபாள அரசு விளக்கம்!
வெள்ள மீட்புப் பணிகளில் சர்வதேச உதவிகளை மறுக்கவில்லை என நேபாள அரசு விளக்கமளித்துள்ளது குறித்து...

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் நேபாள ராணுவம்... - AP
நேபாளத்தில், வெள்ள மீட்புப் பணிகளை மேற்கொள்ள முன்வந்த சர்வதேச நாடுகளின் உதவியை வேண்டாமெனக் கூறியதாக வெளியான செய்திகளுக்கு நேபாள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
திபெத் அருகிலுள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பேரிடரில் சிக்கி இதுவரை 547 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காணாமல் போன 1,500 பேரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நட்பு நாடுகள் நாடுகள் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முன்வந்தன. ஆனால், சர்வதேச உதவிகளை நேபாள அரசு மறுத்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், மீட்புப் பணிகளில் பெரும்பாலும் தங்களின் சொந்த படைகளைக் களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும், நட்பு நாடுகளின் உதவிகளை மறுக்கவில்லை எனவும் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் இன்று (ஆக. 28) விளக்கமளித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“சர்வதேச உதவிகளை மறுக்கவில்லை. ஆனால், வெளியில் இருந்து வரும் மீட்புப் படைகளை அவர்களுக்கு அறிமுகமில்லாத நிலப்பரப்பில் ஈடுபடுத்துவது ஒருங்கிணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் சிக்கல்களை அதிகரிப்பதோடு, எதிர்பாராத ஆபத்துகளையும் உருவாக்கக் கூடும் என்பதால் சொந்த படைகளை பயன்படுத்தியே தற்போதைக்கு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெள்ளம் பாதித்த பகுதிகளில் போக்குவரத்தை மீண்டும் துவங்க 42 தற்காலிகப் பாலங்களை அமைக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் நேபாள அரசு உதவிக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Nepal has denied reports claiming that it declined offers of assistance from international nations to carry out flood relief operations.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






