செம்மரக்கட்டை கடத்தியதாக பொறியியல் மாணவரை கைது செய்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரியும், சிறையில் அடைக்க உத்தரவிட்டது தொடர்பாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரும் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கண்ணன். பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரரான இவரை செம்மரம் கடத்தியதாக பிடித்த முத்தியால்பேட்டை போலீஸார் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் கைது செய்யப்பட்ட கண்ணனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் கண்ணனை 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஜாமீன் கோரி மாணவர் கண்ணன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மனுதாரர் கண்ணன் கடந்த 22-ஆம் தேதி தனது பயிற்சியாளருடன், பாரிமுனை வந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் தம்புச்செட்டி தெருவில் நின்றுகொண்டிருந்த போது அவரைப் பிடித்த முத்தியால்பேட்டை போலீஸார், வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 9 துண்டுகளாக இருந்த 105 கிலோ செம்மரக்கட்டையை கடத்த முயன்றதாகக் கூறி வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மாணவர் கண்ணனை வாரண்ட் இல்லாமல் கைது செய்தது சட்டவிரோதமாகும் என்றுகூறி வாதிட்டார். அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பிரபாவதி, செம்மரக்கட்டை கடத்தியதாக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.செம்மரம் கடத்துவது ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாகும் எனக்கூறி வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். மாநில அளவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரராக இருந்து வருகிறார். தான் எதற்காக கைது செய்யப்பட்டோம் என்ற விவரம் கூட அவருக்குத் தெரிவிக்கவில்லை. இந்த கைது அவரது வாழ்நாள் முழுவதையும் பாதிக்கக்கூடியது. ஒருவரை கைது செய்யும்போது எதற்காக கைது செய்கிறோம் என உத்தரவு காட்டப்பட வேண்டும். இதனை கடைப்பிடிக்காமல் கைது செய்வது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது. எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் இயந்திரத்தனமாகச் செயல்பட்டு மனுதாரரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். எனவே இந்தச் சம்பவம் குறித்து குற்றவியல் நீதிமன்ற நடுவர், வனத்துறை அதிகாரி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, மாணவர் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி
உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிவி பிரகாஷ் நடிக்கும் வெக்கை! போஸ்டர் வெளியீடு!

திமுகவை ஏன் கேள்வி கேட்கவில்லை? பத்திரிகையாளரை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



