எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா:
எனக்குப் பிடித்த புத்தகங்களில் முதன்மையானது ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை . என் சமயம் சார்ந்த, சமூகம் சார்ந்த பல சிந்தனைகளை மாற்றியது, உருவாக்கியது அந்த நூலே. ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன் நாவல் என்னை உலுக்கிய நாவல். அதில் வரும் ஹென்றி மாதிரி வாழ வேண்டும் என்று ஒரு சமயம் ஆசை வரும். இன்னொரு சமயம் அதில் வரும் துரைக்கண்ணு போல வாழ ஆசை வரும்.
எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம், ஜெயமோகனின் காடு எனக்குப் பிடித்த புத்தகங்கள். யாமம் நாவலைப் படிக்கும் முன்பு இரவுகள் என்னைப் பயமுறுத்தும். மனதில் கலவரம் தோன்றும். அதைப் படித்தபிறகு, இரவு ஓர் அற்புத விஷயம் என்பதை உணர முடிந்தது.
நான் காடுகளுக்குள் சென்றதில்லை. கான்கிரீட் காடுகளில் வளர்ந்தவள். ஜெயமோகனின் காடு எனக்கு காடுகளுக்குள் சென்ற அனுபவத்தைக் கொடுத்தது. கல்பற்றா நாராயணனின் கவித்துவமான நாவல் யித்ரமாத்ரம் அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் வரும் கதாநாயகி புலம்பி அழுவாள். அதே சமயம் அவள் மிகவும் உயர்வாகச் சித்திரிக்கப்பட்டிருப்பாள்.
மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதி கே.எம்.ஜெயஸ்ரீ தமிழில் மொழிபெயர்த்த நூல் நிலம் பூத்து மலர்ந்த நாள். சங்க காலப் பாரிமன்னனின் கதையைச் சொல்லும் நூல். சங்க இலக்கிய காலத்தை கவிதைத் தன்மையுடன் சித்திரிக்கும் நூல் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தமான நூல் அது.
தமிழ்நதியின் பார்த்தீனியம் மிகவும் வலியைத் தந்த நாவல் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தமா? டொனால்ட் டிரம்ப் பதிவு!

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுதான் மிகவும் முக்கியம்; அறிமுக வீரர் மானவ் சுதர் கூறியதென்ன?

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



