தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

ஜன.18-இல் உலக நன்மைக்காக  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்

உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் சென்னை குரோம்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

Updated On :15 ஜனவரி 2019, 4:19 am IST


உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் சென்னை குரோம்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
108 சக்தி பீட ஆலய மஹா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 10- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் குருதேவர் காமாட்சி ஸ்வாமிகள் வழிகாட்டுதல்களுடன் அகண்ட ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் வரும் ஜன. 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஸ்ரீ ராம் கணேஷ் மஹால் பிளாட் எண் 41,42, ராகவன் நகர், ஆர்.பி. சாலை எதிர்புறம், குரோம்பேட்டை, சென்னை என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. 
இந்த நிகழ்ச்சியில் அருள்வாக்கு சித்தர் 108 சக்தி பீடாதிபதி காமாட்சி சுவாமிகள் கலந்து கொண்டு அருளுரை வழங்குகிறார். 108 சக்தி பீடத்தின் உற்சவ அம்பாள் ஸ்ரீ ஸ்வர்ண காமாட்சி தாயார், ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா , ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் ஆகிய தெய்வங்களின் பஞ்ச லோக விக்ரகம் இந்த பூஜையில் இடம் பெறவுள்ளது. ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா பாதுகை இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்பிகையின் அருளை பெறலாம். மேலும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணத்திலும் கலந்து கொண்டு பாராயணம் செய்யலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பத்மா சீனிவாசன், சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து மேலும் தகவல் பெற 93810 41018, 76670 01144, 98400 58158 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.