சென்னை வியாசர்பாடியில் அரசுப் பேருந்தின் கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடுவதற்கும், பேருந்துகளின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் ரகளையில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இந் நிலையில், காரனோடையில் இருந்து உயர்நீதிமன்றம் நோக்கி திங்கள்கிழமை வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை மறித்து ஏறிய, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் அதன் கூரையின் மீது ஏறி பாட்டுப்பாடி நடனமாடினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு விரைந்து சென்று கல்லூரி மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
இச் சம்பவம் தொடர்பாக எம்.கே.பி.நகர் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து, ரகளையில் ஈடுபட்டதாக அந்தக் கல்லூரி மாணவர்களான எருக்கஞ்சேரியைச் சேர்ந்த நவீன், ஆவடி கௌரிபேட்டையைச் சேர்ந்த மோகன்குமார், வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், செங்குன்றத்தைச் சேர்ந்த இர்பான்பாஷா, அப்துல் ஹியூம், மணலியைச் சேர்ந்த பி.பிரவீண் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனிம வள லாரிகளை சோதனை செய்யாத 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கல்! அமைச்சா் செங்கோட்டையன் ஆறுதல்
சிறுமியிடம் அநாகரீகமாக பேசிய தொழிலாளி போக்ஸோவில் கைது

விடுதியில் தங்கியிருந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


