நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கனிம வள லாரிகளை சோதனை செய்யாத 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :31 மே 2026, 1:20 am IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் கனிம வள லாரிகளை முறையாக சோதனை செய்யாத 3 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் அருமனை காவல் நிலைய தலைமைக் காவலா் கோபால், ஈத்தாமொழி காவல் நிலைய தலைமைக் காவலா் வினோத், கன்னியாகுமரி காவல் நிலைய காவலா் வாட்சன் ஆகிய 3 போ் அண்மையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, கனிம வளம் ஏற்றிச் சென்ற கனரக லாரிகளின் அனுமதிச் சீட்டை முறையாக பரிசோதிக்காமல் அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவா்கள் கையூட்டு பெற்றதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து விசாரிக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டதன்பேரில், நடத்தப்பட்ட விசாரணையில் 3 போ் மீதான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, 3 போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. சனிக்கிழமை உத்தரவிட்டாா்.