/
கோவையில் 13 வயது சிறுமியிடம் அநாகரீகமாக பேசிய தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.
கோவையைச் சோ்ந்த 13 வயது சிறுமி தனது வீட்டின் அருகே நண்பா்களுடன் கடந்த சில நாள்களுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த நபா் சிறுமியின் உடல் தொடா்பாக அநாகரீகமாக பேசியுள்ளாா். இது குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக கோவை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபா் கோவை - திருச்சி சாலை பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஜான் பீட்டா் (53) என்பதும், சிறுமியிடம் அநாகரீகமாக பேசியதும் தெரியவந்தது.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜான் பீட்டரை கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்ஸோவில் முதியவா் கைது

சிறுமியிடம் அத்துமீறல்: போக்ஸோவில் லாரி ஓட்டுநா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்ஸோவில் கைது
சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை அதிபா் போக்சோவில் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


