தேர்தலில் தமிழகமும், தமிழக மக்களும் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.
சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற பிரேமலதா, பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:
கடந்த இரண்டு தேர்தல்களில் தோல்வியுற்று வாக்கு சதவீதம் குறைந்ததால் கட்சியின் சின்னம் முடக்கப்படாது. தேர்தலில் திமுகவின் வெற்றி, என்னைப் பொறுத்தவரை தமிழகத்துக்குக் கிடைத்த தோல்வி.கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தத் திட்டமும் வரவில்லை. அதற்கு மத்திய அமைச்சரவையில் தமிழக எம்.பி.க்கள் இடம்பெறாததுதான் காரணம். அதுபோல, இப்போது திமுக எதிரணியில் உள்ளது. இது எந்தவகையில் பலனளிக்கும் எனத் தெரியவில்லை.
இந்தியா முழுவதும் ஒரு அலை வீசுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அது
இல்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழக மக்கள் மோடியை தோற்கடித்து விட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை, தமிழகமும் தமிழக மக்களும் தான் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
இந்தியாவின் அங்கம் தமிழகம். தனியாக பிரிந்தால், நிச்சயமாக உரிய அங்கீகாரம் இல்லாமல் போய்விடும். எங்கள் கூட்டணி சார்பில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாவிட்டாலும், உரிமையோடு கேட்டு தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களை கொண்டு வருவோம். இந்தக் கூட்டணி நிச்சயம் தொடரும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லண்டனில் கத்திக் குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலை

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



