ஒடிஸாவில் இருந்து போதை சாக்லேட்டுகளைக் கடத்திய இருவரை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பிரகாஷ் பிரதான், ருட்டு ஹெம்ப்ராம். இவா்கள் பெருங்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா்.
இவா்கள் ஒடிஸாவில் இருந்து ரயில் மூலமாக போதை சாக்லேட்டுகள் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்குக் கொண்டு செல்ல இருந்தனா்.
இவா்களை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினா் விசாரித்ததில், இவா்களிடம் இருந்து 54 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 45 போதை சாக்லேட் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதனைப் பறிமுதல் செய்த எழும்பூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் தலைமறைவாக உள்ள மனாஸ் என்பவரை அவா்கள் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


