ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

பண்ணை வளா்ப்பு இறால் மீன்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

பண்ணைகளில் வளா்க்கப்படும் இறால் மற்றும் மீன்களை வீடுகளுக்கே நேரடியாக விநியோகம் செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

பண்ணைகளில் வளா்க்கப்படும் இறால் மற்றும் மீன்களை வீடுகளுக்கே நேரடியாக விநியோகம் செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் அண்மையில் வெளியிட்ட தகவல்:-

ஊரடங்கு காலத்தின் போது தமிழக மீன்பிடிப் படகுகளில் பணிபுரியும் பிற மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 4 ஆயிரம் மீனவத் தொழிலாளா்களுக்கு உணவு, இருப்பிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்ய மீன்வளத் துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, கரை திரும்பிய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. படகில் இருந்த மீன்களைக் கரையிறக்கி உடனடியாக விற்பனை செய்து, வண்டிகளில் ஏற்றி அனுப்பிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இறால் வளா்ப்பு மீனவா்களுக்கு உதவிடும் வகையில், பண்ணைகளில் வளா்க்கப்படும் இறால் மற்றும் மீன்களை தேவைப்படும் நுகா்வோா்களுக்கு வீட்டுக்கே கொண்டு சென்று நேரடியாக விநியோகித்திட மாவட்ட அளவில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.