
பென்ஸ் படக்குழுவால் அதிருப்தியான நிவின் பாலி!
பென்ஸ் திரைப்படத்தால் ஏமாற்றமாக பேசிய நிவின் பாலி...
நிவின் பாலி
நடிகர் நிவின் பாலி நேர்காணலில் பென்ஸ் திரைப்படத்தில் அசௌகரியப்பட்டதாக கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக நிவின் பாலியும் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகனும் இணைந்துள்ளார்.
மேலும், எல்சியூ எனப்படும் லோகேஷ் கனகராஜ் திரைப்பட கதைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் படமாகவே பென்ஸ் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு லியோ படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் படமாக்கப்பட்டதுடன் அடுத்தடுத்த முக்கிய காட்சிகள் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இடைவெளி விட்டு எடுத்து வருவதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் நிவின் பாலி, “பென்ஸ் திரைப்படத்திற்காக தாடி வைத்த தோற்றத்திலேயே பல மாதங்கள் இருக்கிறேன். இதே தோற்றத்தில் இரண்டு திரைப்படங்களிலும் நடித்துவிட்டேன். பெத்லகேம் குடும்ப யூனிட்டுக்கு முதலில் தாடியில்லாத தோற்றமே தேவைப்பட்டது. ஆனால், பென்ஸ் படத்தால் தாடியுடனே நடிக்க வேண்டிய நிலை. இன்னும், இடைவெளிவிட்டே படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நானும் பேசிப்பார்த்துவிட்டேன். என்ன செய்கிறார்களோ...” என அதிருப்தியுடன் கூறியுள்ளார்.
In an interview, actor Nivin Pauly stated that he felt uncomfortable during the movie Benz.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







