கேரள அரசின் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையின் தூதராக நடிகர் நிவின் பாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு இணைந்து “புராஜெக்ட் ஜீரோ - விஜிலன்ஸ் விசில்” எனும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின், துவக்க விழா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோர் கலந்துகொண்டனர். லஞ்ச ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை மக்களின் பங்கேற்பு, தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்புடன் புதுமையான வழிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கேரள அரசின் புராஜெக்ட் ஜீரோ - விஜிலன்ஸ் விசில் திட்டத்தின் முதல் “விஜிலன்ஸ் கமாண்டோ” எனும் பதவி நடிகர் நிவின் பாலிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, அரசு திட்டங்களில் பிரபலங்களுக்கு வழங்கப்படும் தூதர் பதவிக்கு நிகரானது எனக் கூறப்படுகிறது.
இந்த விழாவில், நடிகர் நிவின் பாலி உறுதிமொழியை வாசிக்க அவருடன் சேர்ந்து மாணவர்களும், அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், அவருக்கு ”விஜிலன்ஸ் கமாண்டோ” பேட்ஜை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அணிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் நிவின் பாலியின் புதிய தோற்றம் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பேசுபொருளாகியுள்ளது. இதையடுத்து, இந்த விழாவில் பதிவு செய்யப்பட்ட விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Summary
Actor Nivin Pauly has been appointed as the ambassador for the Kerala government's anti-corruption drive.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









