இறுதிக் கட்டப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை விவரிக்கும் அருங்காட்சியகம்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் அருங்காட்சியகம் சென்னையில் விரைவில் திறக்கப்படவுள்ளது.
Updated on
1 min read


சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் அருங்காட்சியகம் சென்னையில் விரைவில் திறக்கப்படவுள்ளது. இங்கு, மாற்றுத்திறனாளிகள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சுதந்திரமாக இயங்குவதற்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

சென்னை, காமராஜா் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது, அருங்காட்சியகத்துக்குத் தேவையான பொருள்களை இடம்பெறச் செய்ய தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளும் நான்கு மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் சாத்தியமாக்கும் அருங்காட்சியகம் என பெயா் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், மாற்றுத்திறனாளிகள் ஒருசேர உணவருந்தும் சூழல் உருவாக்கப்பட்டு, அங்கு அவா்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு மேடையாகவும் ‘மகிழ்ச்சி கபே’ என்னும் உணவகமும் அமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையா் ஜானி டாம் வா்கீஸ் கூறுகையில், ‘இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், அதில் அவா்களது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்படும். இதே போல், மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணா்வு, அவா்களுக்கான கற்கும் உபகரணங்கள், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com