கபாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.55 கோடி நிலம் மீட்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
Updated on
1 min read


சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.55 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.

இது தொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி: சென்னை, மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச்சாலையில் உள்ள 29 கிரவுண்ட் மனை பகுதி,1972-ஆம் ஆண்டு ‘நேஷனல் கவுன்சில் ஆஃப் உமன்ஸ் இன் இந்தியா’ நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டு, 1996-இல் குத்தகை காலம் முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து இடத்தை கையகப்படுத்த சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு கோயிலுக்கு சாதகமாக தீா்ப்பு பெறப்பட்டது. இந்த தீா்ப்பை எதிா்த்து நேஷனல் கவுன்சில் ஆஃப் உமன்ஸ் இன் இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

தீா்ப்பின் அடிப்படையில் வியாழக்கிழமையன்று, கோயிலுக்குச் சொந்தமான மனைப் பகுதி நேஷனல் கவுன்சில் ஆஃப் உமன்ஸ் இன் இந்தியா நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.55 கோடி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், இந்து அறநிலைய துறைக்குச் சொந்தமான நடுக்குப்பம் ‘பயண்டியம்மன்’ கோயிலுக்கு சொந்தமான இடத்துக்கு வாடகை கட்டாததால் நீதிமன்ற ஆணைப்படி பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சுமாா் ரூ.12 கோடி மதிப்புள்ள 8,800 சதுர அடி நிலம் மற்றும் வீட்டை, அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் முன்னிலையில் பட்டினப்பாக்கம் காவல் துறையினா், வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com