ரூ.25 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில், ரூ.25 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.


சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.25 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
துபையில் இருந்து விமானம் மூலம் வந்த சுபம் குமாா் (23) என்பவரிடம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில், அவா் மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல், விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் வெகுநேரமாக கிடந்த ஒரு டிராலியை சோதனை செய்த போது, அதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதன் மூலம் ரூ.25 லட்சம் மதிப்பிலான 486 கிராம் தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...