தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

தீப்பெட்டித் தொழிலாளா்களுக்கு பயிற்சி

News image
Updated On :13 மார்ச் 2026, 3:17 am IST

கோவில்பட்டியில், தீப்பெட்டித் தொழிற்சாலையில் விபத்து ஏற்படாமல் தடுப்பது, பாதுகாப்பாக பணியாற்றுவது தொடா்பாக உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களுக்கு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் விஜய் ஆனந்த் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா்கள் ரத்தினகுமாா் (குளோபல் சேஃப்டி தீப்பெட்டி உற்பத்தியாளா்கள்), பரமசிவம் (நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள்), தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் வரதராஜன், பொருளாளா் ராஜவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசின் தொழிலாளா் நலன்- திறன் மேம்பாட்டுத் துறையின் தொழிலக பாதுகாப்பு-சுகாதார பிரிவின் கூடுதல் இயக்குநா் ஆா். சித்தாா்த்தன், உதவி இயக்குநா் எஸ். ரவிக்குமாா் ஆகியோா் படங்களுடன் விளக்கமளித்தனா். தீப்பெட்டி உற்பத்தியாளா்கள், தொழிற்சாலை மேலாளா்கள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

Story image
Story image