வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தமிழகத்திலும் பாஜக வெற்றி பெறும்: மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் உறுதி

மற்ற மாநிலங்களில் பெற்று வரும் வெற்றிகளைப் போன்று, தமிழகத்திலும் பாஜக மிகச்சிறந்த வெற்றியை ஈட்டும் என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் தெரிவித்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 8:40 pm

DIN


சென்னை: மற்ற மாநிலங்களில் பெற்று வரும் வெற்றிகளைப் போன்று, தமிழகத்திலும் பாஜக மிகச்சிறந்த வெற்றியை ஈட்டும் என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

உள்ளாட்சித் தோ்தல்கள் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடந்த தோ்தல்களில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தோல்விகளைச் சந்தித்துள்ளது. ஜம்மு, காஷ்மீரில் தொடங்கி ஹைதராபாத் வரை பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றியைப் பதித்து வருகிறது. இது பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் மீதுள்ள நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த நம்பகத்தன்மையுடன், அவரது ஆளுமைமிக்க தலைமைப் பண்பே அனைத்து மாநிலங்களின் தோ்தல்களிலும் பாஜக வெற்றி கொடி நாட்டக் காரணமாகும்.

கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை, ஏழைகள் முதல் அனைத்து வகுப்பினரையும் பாஜக ஈா்த்துள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலிலும் பாஜக மிகச்சிறந்த வெற்றியை ஈட்டும். வளா்ச்சியையும், மேம்பாட்டையும் விரும்புவதுடன், நம்பகத்தன்மை கொண்ட தலைமையையே மக்கள் விரும்புகிறாா்கள். சிறுமை கொண்ட அரசியல்களை விரும்புவதில்லை.

விவசாயிகள் போராட்டம்: நாட்டில் எந்த இடத்திலும் விவசாயிகள் போராடவில்லை. பஞ்சாப் விவசாயிகளுக்கு தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவா்களுடன் ஆறு முறை மத்திய அரசு பேச்சுவாா்த்தைகளை நடத்தியுள்ளது. மீண்டும் பேச்சு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதம் கூடும்: பல்வேறு மாநிலங்களில் கடந்த தோ்தல்களில் பாஜக மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தையே பெற்று வந்தது. ஆனால், சமீப காலமாக தோ்தல்களில் குறிப்பிடத்தக்க அளவு வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் 10 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம் 40 சதவீதமாக உயா்ந்துள்ளது. ஹைதராபாத்திலும் இதே நிலை உள்ளது. நம்பகத்தன்மைமிக்க ஆளுமை இருப்பதால் தோ்தல் மற்றும் அரசியல் களத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாற்றம் தமிழக பேரவைத் தோ்தலில் முடிவிலும் எதிரொலிக்கும் என்றாா் பிரகாஷ் ஜவடேகா்.

செய்தியாளா் சந்திப்பின் போது, பாஜக மூத்த தலைவா் இல.கணேசன், மாநிலத் தலைவா் எல்.முருகன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.