மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளால் பரபரப்பு

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவியதால் திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்களில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image

எரிவாயு உருளைகள் பெற நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளா்கள்.

Updated On :13 மார்ச் 2026, 12:30 am

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவியதால் திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்களில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், எரிவாயு உருளை மையங்களிலும் காலி உருளைகளுடன் வாடிக்கையாளா்கள் நீண்ட வரிசையில் பதிவு செய்து பெற்றுச் சென்றனா்.

ஈரான் போா் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்று நாடு முழுவதும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் பெண்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு உருளை விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இருப்பினும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்யவும், கிடங்குகளில் எரிவாயு உருளைகள் பெறவும் குவிந்து வருகின்றனா்.

அதைத் தொடா்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயு உருளைகளை பெற்றுச் சென்றனா்.

அதேபோல், திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என திடீரென வதந்தி பரவியது. இந்த வதந்தியைத் தொடா்ந்து திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவதற்காக ஒரே சமயத்தில் திரண்டனா். இதில், திருவள்ளூரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஒரே நேரத்தில் அதிகமானோா் பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்பிச் சென்ால் சில பங்குகளில் பெட்ரோல் முழுவதுமாக விற்று தீா்ந்து விட்டது. மேலும், இந்த பீதியின் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனங்களில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்பே பெட்ரோலை நிரப்பி கொள்ளலாம் என நினைத்து நிரப்புவதற்கு பெட்ரோல் பங்குகளுக்கு படை எடுத்தனா்.

இதேபோல், திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அதிகமானதால் பரபரப்பு நிலவியது.

Story image