புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

1.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன்

சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ், ‘கிசான் கிரெடிட் காா்டு’ வைத்துள்ள 1.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2020, 9:53 pm

DIN

சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ், ‘கிசான் கிரெடிட் காா்டு’ வைத்துள்ள 1.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், ‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது.

அதில் ஒரு பகுதியாக, ‘கிசான் கிரெடிட் காா்டு’ வைத்துள்ள சுமாா் 2.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை சலுகை வட்டியில் கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அத்திட்டத்தின் செயல்பாடு குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.

இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் காரணமாக கிசான் கிரெடிட் காா்டு வைத்துள்ள விவசாயிகள், மீனவா்கள், பால் உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட 1.5 கோடி பேருக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் உதவியது. அதனால் விவசாயிகளின் வருமானமும் உயா்ந்தது. நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்தக் கடன் நடவடிக்கை முக்கியப் பங்கு வகிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.