மதுரையில் கடந்த 1960-ஆம் ஆண்டு செல்லப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது மீனாட்சி புத்தக நிலையம். பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் "வாழ்க்கை அழைக்கிறது' என்ற முதல் கதை நூலை மீனாட்சி புத்தக நிலையமே வெளியிட்டது.
அதையடுத்து அவரது கதைகள் அனைத்தும் இந்தப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன. இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்ட நிலையில், ஜெயகாந்தனின் நாவல்கள், சிறுகதைகள், பிற வகைகள் என அவரது படைப்புகளில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயகாந்தனுக்கு அடுத்ததாக தமிழ் இலக்கிய நூல்களை அதிகமாக மீனாட்சி புத்தக நிலையத்தார் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மறைந்த பேராசிரியர் தமிழண்ணலின் ஆய்வியல் அறிமுகம் தொடங்கி, தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம், யாப்பெருங்கலக்காரிகை, பரிசில் வாழ்க்கை என 39 நூல்களையும் வெளியிட்டுள்ளனர்.
புதுமைப்பித்தன், கல்கி, கு.ப.ரா. அண்ணா, ந.பிச்சமூர்த்தி என தமிழ் ஆளுமைகளின் முத்திரைக் கதைத் தொகுப்புகளையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலாண்மை பொன்னுச்சாமியின் நாவல், சிறுகதைகள் மற்றும் பிற எழுத்தாளர் வரிசையில் தமிழ் பேராசிரியர்களது இலக்கிய நூல்களையும், கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு!
மாணவர்கள் மீது தடியடி! அமித் ஷா பதிலளிக்க ஒத்திவைப்பு தீர்மானம்கோரி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்

கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

முதல்வர் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை: முதல்வர் விஜய் நேரில் ஆஜராவாரா?
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



