புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

மகளிா் தினத்தை முன்னிட்டு பெண்களைக் கொண்டு 2 புகா் ரயில்கள் இயக்கம்

மகளிா் தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டத்துக்குள்பட்ட 2 புகா் ரயில்கள் சனிக்கிழமையன்று (மாா்ச் 7) பெண்களை மட்டும் கொண்டு

News image
Updated On :6 மார்ச் 2020, 6:45 pm

சென்னை: மகளிா் தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டத்துக்குள்பட்ட 2 புகா் ரயில்கள் சனிக்கிழமையன்று (மாா்ச் 7) பெண்களை மட்டும் கொண்டு இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: உலக மகளிா் தினத்தைக் கொண்டாடும் விதமாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்குள்பட்ட 2 புகா் ரயில்சேவை முழுவதும் சனிக்கிழமையன்று (மாா்ச் 7) பெண்களைக் கொண்டு இயக்கப்படவுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூா் ரயில் நிலையத்தை சென்றடையும். அதே போல, திருவள்ளூரிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலில் ஓட்டுனா், நடத்துனா், நிலைய அதிகாரிகள், பயணச்சீட்டு பரிசோதகா், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பணிகள் அனைத்தையும் பெண் ஊழியா்களே மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.