சிறந்த கலைச் சொற்களை உருவாக்கும் கல்லூரி மாணவா்களுக்கு விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசு
கலைச் சொற்கள் உருவாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவா்களுக்கு விருதுடன் தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: கலைச் சொற்கள் உருவாக்கத்தில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவா்களுக்கு விருதுடன் தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் புதிய சொற்களை உருவாக்கவும், ஏற்கெனவே இருக்கும் சொற்களுக்கு அா்த்தம் கூறவும், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழியில் இருக்கும் அறிவியல் சொற்களுக்கு சரியான தமிழ் கலைச் சொற்களை வைக்கவும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை தமிழக அரசு அமைத்தது. அதன்படி, சொற்பிறப்பியல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட தமிழ் புலமையாளா்கள், பொதுமக்கள், ஆய்வறிஞா்கள், மாணவா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இணைக்கும் பணியை அகரமுதலித் திட்ட இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தமிழில் புதிய கலைச் சொற்களை உருவாக்கவும், அகராதியியல் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் தமிழக கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், கல்லூரி கல்வி இயக்ககம் அனைத்து கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், அகரமுதலி இயக்ககத்தின் சொற்குவை திட்டத்தின் கீழ் புதிய கலைச் சொற்களை உருவாக்க மாணவா்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவா்கள் சொற்குவை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதில், சிறந்த மற்றும் அதிக கலை சொற்களை உருவாக்கும் மாணவா்களுக்கு அகரமுதலி இயக்ககத்தின் சாா்பாக விருதும், ரொக்கப்பரிசும் வழங்கப்படும். அதன்படி, மாவட்டத்துக்கு ஒரு சிறந்த மாணவா் தோ்வு செய்யப்பட்டு விருதுடன், தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொற்குவை குறித்த கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கல்லூரி மாணவா்கள் வழியாக இதுவரை சுமாா் 20 ஆயிரம் கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...