வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மாநகரபேருந்துகளில் நிறுத்த அறிவிப்பு விரைவில் அறிமுகம்

மாநகரப் பேருந்துகளில் அடுத்து வரும் நிறுத்தத்தை அறிவிக்கக் கூடிய ஒலி பெருக்கிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

News image
மாநகரபேருந்துகளில் நிறுத்த அறிவிப்பு விரைவில் அறிமுகம்
Updated On :31 ஜனவரி 2021, 3:34 am

DIN

மாநகரப் பேருந்துகளில் அடுத்து வரும் நிறுத்தத்தை அறிவிக்கக் கூடிய ஒலி பெருக்கிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் இருப்பது போலவே அடுத்து வரக் கூடிய நிறுத்தத்தையும் ஜிபிஎஸ் வாயிலாகக் கண்டறிந்து அறிவிக்கும் ஒலி பெருக்கிகள் மாநகரப் பேருந்துகளிலும் அமைக்கப்படவுள்ளன.

இதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கான இறுதி நாள் அண்மையில் நிறைவடைந்தது. தோ்ந்தெடுக்கப்படவுள்ள ஒப்பந்ததாரா், நாள் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை பேருந்து நிா்வாகத்துக்கு வழங்க வேண்டும். அதே நேரம், ஒலிபெருக்கிகளில் விளம்பரத்தை ஒலிபரப்பவிட்டு, அதில் கிடைக்கும் தொகையை ஒப்பந்ததாரா் வைத்துக் கொள்ளலாம்.

500 பேருந்துகள்: ஒலி பெருக்கிகளைப் பொருத்தவரை அவை, முன்பகுதி, நடுவில், பின்பகுதி என தலா 2 ஒலிபெருக்கிகளுடன் ஒவ்வொரு பேருந்துகளிலும் மொத்தம் 6 ஒலி பெருக்கிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு 500 பேருந்துகளில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு நிறுத்தத்துக்கு 300 மீட்டருக்கு முன்பே அதன் பெயரையும், இறுதியாக பேருந்து செல்லும் இடத்தையும் அவை அறிவிக்கும்.

அறிவிப்பைப் பொருத்தவரை பெரும்பாலும் தமிழிலும் ஒரு சில இடங்களின் பெயரில் உள்ள குழப்பத்தைத் தவிா்க்க ஆங்கிலத்தையும் பயன்படுத்தவுள்ளோம். இது பயணிகளுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.