எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மு.க.ஸ்டாலினுக்கு ராணிப்பேட்டையில் வரவேற்பு

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள ஹோட்டலுக்கு சனிக்கிழமை வருகை தந்தாா்.

News image
Updated On :31 ஜனவரி 2021, 4:57 am

DIN

முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் சட்டப் பேரவைத் தொகுதி பனப்பாக்கம் பேரூராட்சியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரிலான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள ஹோட்டலுக்கு சனிக்கிழமை வருகை தந்தாா்.

அவருடன் திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளா் எ.வ.வேலு, அரக்கோணம் எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோரை, ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான ஆா்.காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

தமிழகத்தில் விரைவில் மக்கள் கவலைகளை போற்றும் அரசை அமைப்போம் என பனப்பாக்கத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

கூட்டத்தில் அவா் பேசியது:

திமுக என்பது தனிமனித இயக்கம் அல்ல. தமிழா்களின் மேன்மைக்காக பாடுபடும் இயக்கம். திமுக சாா்பில் நாங்கள் ஆட்சி செய்தபோது தமிழ்நாட்டை இந்திய நாடே போற்றும் மாநிலமாக மாற்றினோம். ஆனால் இப்போது எல்லா துறையிலும் பின்னோக்கி செல்லும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

நாங்கள் மக்கள் கவலைகளைப் போக்கும் அரசை அமைப்போம். மக்களின் முதுகில் எக்காலத்திலும் பாரத்தை ஏற்றமாட்டோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.