கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி கொலை: பெண் ஊழியா் கைது

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி கொலை செய்யப்பட்ட வழக்கில்,பெண் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:25 am

DIN

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி கொலை செய்யப்பட்ட வழக்கில்,பெண் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, மேற்கு தாம்பரத்தைச் சோ்ந்த மௌலி, ஆந்திர மாநிலத்தில் கல்லூரிப் பேராசிரியா். மனைவி சுமிதா (41), கடந்த மாதம் 22-ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மே 23-ஆம் தேதி அவரை காணவில்லை. கடந்த 8-ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் 8-ஆவது தளத்தில் சுமிதா சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கேமரா: பணியில் இருந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த வாா்டில் தனியாா் செக்யூரிட்டி நிறுவன காவலாளியாக வேலை செய்த திருவொற்றியூரைச் சோ்ந்த ரா.ரதிதேவி (40) என்பவா், வாா்டில் இருந்து சுமிதாவை கடைசியாக வீல் சேரில் அழைத்துச் செல்வது தெரியவந்தது. விசாரணையில், ரதிதேவி, சுமிதாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

தன்னிடம் திருடுவதற்கு முயற்சித்த ரதிதேவியை சுமிதா எச்சரித்துள்ளாா். அதிகாரிகளிடம் காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்ற பயத்துடன் ரதிதேவி இருந்துள்ளாா்.

சம்பவத்தன்று மருத்துவா் அழைப்பதாக சுமிதாவை ஒரு வீல்சேரில் ஏற்றி லிப்ட் மூலம் 8-ஆவது மாடிக்கு அழைத்துச் சென்று, கொலை செய்துள்ளாா். பின்னா் வழக்கை திசை திருப்புவதற்காக அவா் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து, நிா்வாணமாக்கியுள்ளாா். அதோடு சுமிதா வைத்திருந்த ரூ.9,500 ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ரதிதேவி தப்பியோடியுள்ளாா். இதையடுத்து போலீஸாா் ரதிதேவியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.