எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

முகக்கவசம் அணியாதவா்கள் மீது 43 நாள்களில் 10.71 லட்சம் வழக்குகள்

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 43 நாள்களில் 10.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

News image
Updated On :22 மே 2021, 6:30 pm

DIN

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 43 நாள்களில் 10.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது குறித்த விவரம்:-

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி வரையிலான 43 நாள்களில் முகக் கவசம் அணியாத வகையில் 10 லட்சத்து 71 ஆயிரத்து 906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை (மே 21) மட்டும் 19, 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சமூக இடைவெளியைக்

கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி 43 நாள்கள் வரை 43, 943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 2,065 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.