எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சென்னையில் இருந்து 400 ஆம்னி பேருந்துகள் இயங்கும்: உரிமையாளா்கள் தகவல்

சென்னையில் இருந்து 400 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :22 மே 2021, 6:30 pm

DIN

சென்னையில் இருந்து 400 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் சனிக்கிழமை கூறியதாவது: பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து, தளா்வில்லா பொதுமுடக்கம் அமலாவதையொட்டி இரண்டு நாள்கள் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. திடீரென வெளியான இந்த அறிவிப்பால், சாலை வரி செலுத்தாதது, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அனைத்து பேருந்துகளையும் எங்களால் இயக்க முடியவில்லை.

தமிழகம் முழுவதும் தயாா் நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம். சென்னையில் இருந்து இரண்டு நாள்களுக்கும் சுமாா் 400 பேருந்துகள் இயக்கப்படும். இது தொடா்பாக அனைத்து இணையதள முன்பதிவு தளத்துக்கும் தகவல் அனுப்பப்பட்டு, முன்பதிவு தொடங்கியுள்ளது. பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.