நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மழை காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படவில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் இருந்து புறப்படும், எந்த ஒரு தொலைதூர ரயிலும் ரத்து செய்யப்படவில்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலையில் புறப்படும் சில ரயில்கள் மட்டும் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :7 நவம்பர் 2021, 10:25 am

DIN

சென்னையில் வடகிழக்கு பருவமழையையொட்டி நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். 

இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்படும், எந்த ஒரு தொலைதூர ரயிலும் ரத்து செய்யப்படவில்லை.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலையில் புறப்படும் சில ரயில்கள் மட்டும் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில், வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். எழும்பூர், வேப்பேரி மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்தார். பின்னர் மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த இரு நாள்களுக்கு (நவ.8,9) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.